புரட்சிகர மருத்துவர்கள்


Author: ஸ்டீவ் புரோவர், தமிழில்:கு.வி.கிருஷ்ணமூர்த்தி

Pages: 0

Year: 2022

Price:
Sale priceRs. 300.00

Description

*புரட்சிகர மருத்துவர்கள் - ஸ்டீவ் புரோவர்*
உடல்நலப் பராமரிப்பு பற்றிய உலகத்தின் எண்ணக்கருத்தை *வெனிசுலாவும் - கியூபாவும்* மாற்றி வருவது எப்படி?
அதுதாம் *‘புரட்சிகர மருத்துவர்கள்'*
*வெனிசுலாவின்* புதுமையான, ஊக்கமளிக்கும் உடல்நலப் பராமரிப்பானது , ஏழைகளை எப்படி தாங்களாகவே செயல்படுத்திக்கொள்ளும் வகையில் அமைந்தது என்று அத்திட்டத்தின் நேரடித் தகவல்களைக்கொண்டு தமிழ் வாசகர்களுக்கு அளிக்கிறது இந்நூல்.
நீண்டகாலப் பங்கேற்பிலிருந்தும் , ஆழமான ஆய்விலிருந்தும் கிடைத்த தகவல்களைப் பயன்படுத்தி , *வெனிசுலாவின்* ஒருங்கிணைந்த *சமுதாய மருத்துவத் திட்டம்* தோன்றிய கதையைச் சொல்கிறார், ஆசிரியர்
*ஸ்டீவ் புரோவர்*.
மருத்துவ ஆசிரியர்கள் கிராமப்புறங்களுக்கும் ஏழைகள் வசிக்கும் நகர்ப்புறங்களுக்கும் சென்று விவசாயிகள், தொழிலாளர்களிடையே ஆள்களைச் சேர்த்து, அவர்களை மருத்துவர்களாக்குவதற்குப் பயிற்சியளிக்கிறார்கள். என்றும் இத்தகைய திட்டங்கள் முதன்முதலில் கியூபாவில் உருவாக்கப்பட்டன என்றும் ,*கியூபாவைச்* சேர்ந்த மருத்துவப் பணியாளர்கள் இன்று *வெனிசுலாவிலும் - உலகெங்கிலும் ஆலோசகர்களாகவும் - அமைப்பாளர்களாகவும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்று ஆதாரத்துடன் பதிவிடுகிறார்.இந்தப் *“பன்னாட்டு மாதிரி தான்* அங்கு பெரும் வெற்றி பெற்றிருக்கிறது;
*இன்று கியூபா, மருத்துவத்திலும் மருத்துவப் பயிற்சியிலும் ஓர் உலக முன்னோடியாக விளங்குகிறது. மேலும் கியூபா மூலம் உதவிபெற்ற வெனிசுலாவின் மக்கள் இப்போதும் எப்படி உள்ளார்கள்! எவ்வாறு இருக்கிறார்கள்! என்பதையும் *புரோவர்* தரவுகளின் அடிப்படையில் வடிக்கிறார்.
*மக்களுக்கு மருத்துவ அதிகாரம் அளிக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இந்த *புரட்சிகர மருத்துவர்கள்*

You may also like

Recently viewed