பூமி இழந்திடேல் (சூழலியல் - காலநிலைச் சிறப்பிதழ்)


Author: சு. அருண் பிரசாத்

Pages: 0

Year: 2022

Price:
Sale priceRs. 600.00

Description

சூழலியல், காலநிலை மாற்றம் சார்ந்த கட்டுரைகள், நேர்காணல், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு நேர்காணல்கள், இலக்கியப் பகுதிகள் அடங்கிய இந்த புத்தகத் தொகுப்பை சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் வெளியிட்டார்.முதல் பிரதியை கவிஞர் ஆதிரனும், இரண்டாம் பிரதியை இதழாளர் ஆதி வள்ளியப்பனும் பெற்றுக் கொண்டனர். இதழியலாளர் சுரேஷ் குமார் உள்ளிட்டோரும் புத்தகப் பிரதியை பெற்றுக்கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

புத்தக பிரதியை பெற்றுக் கொண்ட இதழியலாளர் சுரேஷ்குமார்புத்தக பிரதியை பெற்றுக் கொண்ட இதழியலாளர் சுரேஷ்குமார்ஏற்கெனவே காலநிலை மாற்றத்தால் உருவாகும் பருவம் தவறிய மழை, வெள்ளம், வறட்சி, புயல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளை எந்த நகரம் அதிகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது குறித்த பட்டியலில் சென்னை 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.பல்வேறு நகரங்களில் வாழும் இன்றைய தலைமுறையினர் அனைவரும் காலநிலை மாற்றத்தின் அபாயத்தை நேரடியாக உணரத்தொடங்கி விட்டனர். இந்நிலையிலேயே 'பூமி இழந்திடேல்' புத்தகம் வெளியாகி சூழலியல் ஆர்வலர்களிடையே மட்டுமல்லாமல், வாசகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்புத்தகமானது கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளத்தால் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Recently viewed