Description
அறிவு எதிரியல்ல. அதைப் பயன்படுத்திக்கொள்ள இயலும். ஞானம் அடைவதற்கு முன்னர் பொய்களைக் கண்டு மகிழ்வதற்கு அது உதவிகரமாக அமையும். ஞானம் பெற்ற பிறகு உண்மையைச் சுட்டிக்காட்ட அது பயனுள்ளதாக இருக்கும். உண்மையை அது சூசகமாகக் காட்டும்போது, அது நிலவை விரலால் சுட்டிக்காட்டும் செயல்போலாகிவிடுகிறது.
ஒன்றை நினைவில் வையுங்கள். ஆனால் அறிவு வீட்டின் எஜமானாக மாறிவிடக்கூடாது என்பதை மறந்துவிடாதீர்கள். வீட்டிற்கு யாரும் எஜமானாக இருக்கலாகாது. உங்கள் முழுமை நிலை இணக்கத்துடன் செயல்பட வேண்டும். உங்களுக்குள் எந்த எஜமானரும் இல்லை என்றால், நிஜமான குரு வெளிப்படுவார். அதுவே கடவுளாகும்.
சுயமாக நீங்கள் ஒரு எஜமானரை வைத்திருந்தால் உங்களுக்குள் நிஜமான குரு வந்து சேர்வதை அது தடுக்கிறது. அது அறிவாக இருக்கலாம். அது இதயமாக இருக்கலாம். அது தர்க்கமாக இருக்கலாம். அது விசுவாசமாக இருக்கலாம். இப்படி எதுவாகவும் இருக்கலாம். உங்களுக்குள் ஒரு குரு இருந்தால் நிஜமான குரு உங்களுக்குள் நுழைய இயலாது. குரு உள்ளே நுழைய அங்கு இடமிருப்பதில்லை. ஒன்று மட்டுமே நிஜமான குருவாக இருக்கிறது. அந்த நிஜமான குரு கடவுளாகும்.