மகிழ்ச்சியான பன்றிக்குட்டி


Author: வெய்யில்

Pages: 72

Year: 2017

Price:
Sale priceRs. 100.00

Description

பெருவெடிப்புக் கோட்பாடும் ஒரு பாலியல் பழமொழியும் சந்தித்துக்கொள்கிற புள்ளியில் நிலத்தை அகழ்ந்தவர்கள் கனவில் திளைத்திருக்கும் இரண்டு மகிழ்ச்சியான எலும்புத்துண்டுகளைக் கண்டார்கள் குயவரின் வெறிபிடித்த சக்கரத்தை கபாலத்துக்கு இடம்மாற்றும் கள்கலயங்கள் ஆகாசத்துக்கு அருகே மிதந்துகொண்டிருப்பதை ஞாயிறு புன்னகைமிக ரசித்துக்கொண்டுதானிருக்கிறது பஃறுளியிலிருந்து கூவத்துக்கான நீளத்தில் ஒரு செய்யுள் வார்த்து மணல்கடிகாரத்தின்முன் படையலிடும் பாணனின் பெருமூச்சு கொல்லரின் உலையைத் தூண்டுகிறது அணங்கின் நெஞ்செலும்பு பாளையைத் தட்டி வடிக்க ஏதுவாயிருக்கிறது “பாலூட்டிகள் மட்டுமே கனவு காண்கின்றன' உள இயல் நடனத்தில் கலயங்கள் முலைகளாய் ஆடுகின்றன.

You may also like

Recently viewed