தன்னை நகர்த்துகிறதென கூழாங்கல்
தன்னை இழுத்துச் செல்கிறதென சருகு
தன்னைச் சுமந்து செல்கிறதென மழை
தன்னைக் கரை சேர்க்கிறதென படகு
தன் தாகம் தணிக்கிறதென கரை வேர்
தன் பாவம் கரைக்கிறதென சாம்பல்
தன் மோகம் தீர்க்கிறதென கடல்
சைக்கிள் டயர் ஓட்டிச் செல்லும்
சிறுவனைப் போல் நதி.