Description
அறிவியல் பூர்வமான வரலாற்று ஆய்வில் டி.டி.கோசாம்பி ஆர்.எஸ். ஸர்மா, இர்ஃபான் ஹபீப், ரொமிலா தாப்பார் வரிசையில் வருபவர் பேரா. சம்கலக்ஷ்மி. அவரது ஆய்வு, எழுத்து, பணி பெருமளவு தென்னிந்திய மற்றும் தமிழக வரலாறு பற்றியது என்பது தனிச் சிறப்பு. ‘வணிகம், கருத்தியல், நகர்மயம்’ என்ற இந்த நூலில் இந்த மூன்று கூறுகள் மற்றும் அவை ஒன்றிணைந்து சமூக மாற்றத்தை, வரலாற்றை உருவாக்கியதை கி.மு. 300 முதல் கி.பி. 1300 வரையிலான நீண்ட காலப் பரப்பில் விளக்குகின்றார். இந்த நூலிலும் இதைத் தொடர்ந்து வர இருக்கின்ற ‘மதம், பாரம்பரியம், கருத்தியல்’ ஆகிய நூலிலும் ‘கருத்தியல்’ வகிக்கும் பங்கு குறித்த அவரது விளக்கங்கள் வரலாற்று ஆய்வில் தனித்துவமானவை.