வாய்ஜாலக் குடியரசு


Author: அபிநவ சந்திரசூட், தமிழில்-க.பூரணச்சந்திரன்

Pages: 0

Year: 2022

Price:
Sale priceRs. 475.00

Description

*வாய்ஜாலக் குடியரசு - அபிநவ் சந்திரசூட்*
இந்திய அரசியலமைப்பு சட்டம், உலகினில் சிறந்த சட்டங்களை கொண்ட நாடுகளில் முதன்மையான நாடாக கொண்ட இந்தியாவின் அடிநாதமாக திகழ்கின்றது .
சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலத்தில் *அம்பேத்கர்* அவர்களால் பார்ப்பணீய எதிர்ப்புகளுக்கும் - நெருக்கடிக்கும் மத்தியில் உருவாக்கப்பட்டது. சிறப்புமிகு சட்டமாக இருக்கும் இச்சட்டத்தின் பிரிவு 25 என்பது
*பேச்சு - வெளிபடுத்துதல் - நடைமுறைபடுத்துதல்* என இந்திய மக்கள் அனைவருக்கும் பாகுபாடில்லாமல் அடிப்படை உரிமையாக நல்கி வழங்குகின்றது.
ஆனால் நடைமுறையில் ஆதிக்க - அதிகார போக்கு உடையோர்களால் சாமானியர்களுக்கு இவ்வுரிமை வழங்கபடுகிறதா என்றால் இல்லை என்றே கூறமுடிகின்றது. குறிப்பாக பாஜக ஆட்சியிலமர்ந்த கடந்த 2014 ஆண்டு முதல் வெளிப்படையாகவே அரசே முன்னின்று உரிமை மறுப்பினை நிகழ்த்துகின்றது.
அரசின் (பாஜக) திட்டங்களையோ , அரசை வழி நடத்தும் அமைப்பின் (ஆர்எஸ்எஸ்) கொள்கைகளையோ விமர்சிப்பவர்களை தேசவிரோதிகளாகவும் - மத எதிரிகளாக வகைபடுத்தும் போக்கு திட்டமிட்டே உருவாக்கபடுகின்றது.
சகிப்புத்தன்மை அற்ற நாடாக இந்தியா உருமாறி வருறது என *முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி முதல் நடிகர் அமிர்கான்* வரை பல்வேறு நிகழ்வுகளில் வெளிபடுத்தவே செய்திருக்கின்றனர்.
*வாய்ஜாலக் குடியரசு* என்ற இப்புத்தகம் எப்படியெல்லாம் சாமானியர்களின் உரிமைகள் பறிக்கபடுகின்றது என்றும் , ஏட்டுக்குள் இருக்கும் சுரக்காயினை எப்படி குழம்பினில் உபயோகிக்க மறுக்கிறார்கள் என்பதனை ஆய்வு ரீதியில் எடுத்தியம்புகின்றது.

You may also like

Recently viewed