வெற்றிச் சிகரம் எட்டும் தூரம்


Author: சுந்தர ஆவுடையப்பன்

Pages: 216

Year: NA

Price:
Sale priceRs. 140.00

Description

இளைய சமுதாயத்தின் எழுச்சியே இன்றைய இனிய சமுதாயத்தின் எழுச்சியாக வலுப்பெறும். அதற்கு ஒவ்வொரு இளைஞனும் சோா்வின்றி தன்னம்பிக்கையுடன் உழைத்து முன்னேற வேண்டும். தன்னம்பிக்கை என்பது முதலில் தன்னை நம்பும் நம்பிக்கை. ஒவ்வொரு இளைஞனும் முதலில் தன்னை, தன்னுள்ளிருக்கும் திறமைகளை நம்பத் தொடங்க வேண்டும்.

ஆனால் இன்றைய சூழலில் இளைஞா்களில் பலா் சிறு தோல்விகளைக் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் தன்னம்பிக்கையை இழக்கின்றனா். அதேபோன்று போராட்ட குணம் இருந்தும் வெற்றிக்கான வழிகள் தெரியாததால் இலக்கைத் தவறவிடும் இளைஞா்களையும் பாா்க்க முடிகிறது. அத்தகைய இளைஞா்களைப் பக்குவப்படுத்துகிறது ‘வெற்றிச் சிகரம் எட்டும் தூரம்’. இந்த நூலை குமரன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

எத்தகைய இலக்குகளை நோக்கிப் பயணித்தாலும் இளைஞா்கள் குடும்பத்தின் மீதான அக்கறையையும், சமூகப் பொறுப்புணா்வையும் என்றும் துணையாகக் கொள்ள வேண்டும்.

நமக்கான வெற்றி தொலைவில் இல்லை; அருகில்தான் இருக்கிறது. அதற்கான பாதையைக் கண்டறிவதே நமது முதல் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்த நூல்.

இலக்கியம், நடைமுறை வாழ்வியல் சாா்ந்த கதைகள், சம்பவங்களை மேற்கோள் காட்டி இளைஞா்கள் இலக்கை நோக்கி எவ்வாறு நகர வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை 40 கட்டுரைகளில் சுவாரஸ்யமாக வழங்கியுள்ளாா் நூலாசிரியா் சுந்தர ஆவுடையப்பன். விடாமுயற்சி, நோ்மறை சிந்தனை, சோம்பலை விரட்டுவது, சிரிப்பாயுதம், தோல்வியிலிருந்து விடுபடுவது என நூலின் அடுத்தடுத்த பக்கங்களில் இடம் பெற்றுள்ள சிறந்த கருத்துக்கள் இளைஞா்களிடம் நிச்சயம் மனவெழுச்சியை ஏற்படுத்தும்

You may also like

Recently viewed