Description
வியத்நாமில் 1926இல் பிறந்த திக் நியட் ஹான், மகாயான புத்த மரபிலும் வியத்நாமின் 'தீயப் மர’பிலும் பயிற்சி பெற்றவர். வியத்நாம்மீது அமெரிக்கா போர் தொடுத்த சமயத்தில் இரு தரப்புக்கும் நடுநிலையாகச் செயல்பட்டார். 1966இல் வியத்நாம் மக்களின் துயரங்களைப் பற்றி அமெரிக்காவில் பேசச் சென்றவரை நாடு திரும்ப விடாமல் வியத்நாம் தடை செய்தது. பிறகு, திக் நியட் ஹான் பிரான்சில் அரசியல் தஞ்சம் அடைந்தார். அங்கே 1982இல் தனது தியான சங்கத்தைத் தொடங்கி, தற்கால வாழ்வுக்கு மிக அவசியமான பௌத்தத்தைப் பரப்பிக்கொண்டிருக்கும் இவர், எந்த ஒரு சித்தாந்தத்தையும், அது பௌத்தமாக இருந்தாலும்கூட, விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கக் கூடாது என்ற கருத்தை போதித்துவருபவர். 'அமைதி என்பது நாமே' (Being Peace) என்னும் இப்புத்தகம் நவீன ஆன்மீக கிளாசிக்காகப் புகழ்பெற்றது.