Description
இன்று உலகெங்கிலும் அலையடித்துக் கொண்டிருக்கும் புரட்சிகர ஊற்றெழுச்சி அரபு மக்களின் பேரெழுச்சி. ஸ்பெயினின் இன்டிக்னோக்கள், வால்ஸ்டீரிட்டைக் கைப்பற்றுவோம் என எழுந்த அமெரிக்க மூலதன எதிர்ப்பாளர்கள், இலண்டன் தெருக்கிளர்ச்சியாளர்கள் என அது உலகெங்கிலும் தனது தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இஸ்லாமிய மரபில் ஜனநாயகம் என்பது சாத்தியமில்லை என்பவர்களை மறுத்தபடி, அரபு உலகெங்கிலும் எழுந்த ஜனநாயகத்திற்கான வெகுமக்கள் திரள் எழுச்சி அது. மரபார்ந்த கருத்தியல் வரையறைகளைத் தாண்டி, காலனியச் சுமைகளை தமதுதோள்களில் இருந்து உதறியபடி, அரபு நிலப்படத்தை மறுவரையறை செய்த மக்கள் எழுச்சி அது. இஸ்லாம் என்பது வன்முறை வாழ்முறை என்பதனை மறுத்து, வன்முறையல்லாத புதிய மக்கள்திரள் போராட்டமுறை குறித்த தேடலை உலகெங்கிலும் எழுப்பியது அரபுப் புரட்சியின் அனுபவங்கள். இன்றைய உலகில் அரபுப் புரட்சியின் அரசியல் முக்கியத்துவத்தையும், புதிய போராட்ட வடிவங்களுக்கான அதனது தேடலையும் ஆவணப்படுத்தும் முகமாக எழுதப்பட்ட கட்டுரைகள் இங்கு நூல் வடிவம் பெற்றிருக்கிறது.