Description
இந்நூலில் இடம்பெற்றுள்ள பத்துக் கட்டுரைகளையும் வாசித்து முடித்தபோது, மோகன்ராஜன் ஓர் சமரசமற்ற எழுத்துப்போராளி என்பது நமக்குப் புரிகிறது. “அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுங்கள்”, என்று எட்வர்ட் சையித் சொல்வதுபோல, விளிம்புநிலை மக்கள், உழவர்கள், தொழிலாளிகள், சிறுகுறு தொழில் முனைவோர், மாணவர்கள், மகளிர், சமூகச் செயற்பாட்டாளர்கள், படைப்பாளிகளுக்கு எதிரான ஆளும் வர்க்கத்தின் வன்முறையையும், மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தத் துடிக்கும் நாசகாரச் சக்திகளுக்கு எதிராகவும், தனது எழுதுகோலைத் துணிச்சலுடனும், நேர்மையுடனும், சமரசமின்றியும் பயன்படுத்தியிருப்பது, பாராட்டுக்குரியது.