Description
கடல்வாழ் உயிரிகளுக்கும் மனிதருக்கும் இடையிலுள்ள தொடர்பை இந்நூல் பேசுகிறது. தோழர் நாராயணி ஒரு கடல்வாழ் உயிரின ஆய்வாளர் என்பதால் எங்கே நூலானது கடற்துறை சார்ந்த தொழில்நுட்ப சொற்களால் நிறைந்திருக்குமோ என்கிற மெல்லிய அச்சம் இருந்தது. ஆனால் நூல் வெறுமனே கடல் அறிவியலை மட்டுமே பேசாது, அதனுடன் சமூக அறிவியல் மற்றும் பொருளியலை இணைத்துப் பேசியுள்ளதே இதன் சிறப்பாக அமைந்துள்ளது. .
இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள மேற்கு நாடுகளில் வழங்கும், ‘க்ராக்கென்’ புனைவுகளைப் படித்தபோது, மாலத்தீவின் நாட்டாரியல் கதைகள் நினைவுக்கு வந்தன. அதுபோன்ற கடல்சார் புனைவுகளை அங்குதான் நான் முதன்முதலில் கேள்விப்பட்டேன். ஒரு கப்பலையே கவிழ்க்கக் கூடிய மாபெரும் கணவாய் என்கிற பூதப் புனைவுகளை நிலத்தில் உள்ளது போலவே மனிதர்கள் கடலுக்கும் புனைந்து வைத்துள்ளனர். அந்தப் புனைவுகளை விரிவாக விளக்கிவிட்டு குறிப்பிட்ட அந்த ஊசிக்கணவாய் வகை (Giant Squid) 45 அடிகள் வரை மட்டுமே வளரக்கூடியது என்று அறிவியல்பூர்வமாக விளக்கி நமது அறிவை அமைதிப் படுத்தியுள்ளார் நாராயணி.
- எழுத்தாளர் நக்கீரன்