Description
இந்நூல் திராவிடர்களின் தோற்றம், அவர்களின் பண்பாடு ஆகியன குறித்து மேனாடு மற்றும் இந்திய நாட்டு அறிஞர்களிடையே உறுதிபட நிலவும் கருத்துக்களை ஆய்வதற்கும், திராவிடப் பண்பாடு எனப் பொதுவாக உணரப்படுவதும், தமக்குத்தாமே, தம்மளவிலான, அப்பண்பாட்டை உருவாக்கிய தமிழர், அம்மண்ணுக்கே உரிய தொல் பழங்குடியினர் என்பதை உணர்த்துவதற்கும், ஒரு பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. குமரிக் கண்டம் என்ற ஒன்று இருந்ததேயில்லை என்பர் சிலர். ஆனால் அண்மையில் கடலில் ஆழ்வகழ்வாய்வு செய்த சோவியத் நிலவியலறிஞர்கள் குமரிமுனையில் நிலப்பரப்பு நீரில் ஆழ்ந்ததற்குச் சான்றுகள் உள்ளன என்று கண்டறிந்துள்ளனர். தொல் ஊழிக் காலத்தில் ஆஸ்திரேலியா, இந்தியாவின் தென்பகுதி, ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் ஒன்றாக இணைந்திருந்தன என்ற கருத்து அண்மையில் ஆய்வுவழி வலுப்பெற்று வருகிறது.
எது எவ்வாறிருப்பினும் இத்தகைய ஆய்வுகளுக்குத் துண்டுகோலாகப் பேராசிரியர் இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய இந்நூல் அமைந்துள்ளது.