தோட்டியின் மகன்


Author: தகழி சிவசங்கரப்பிள்ளை

Pages: 176

Year: 2014

Price:
Sale priceRs. 220.00

Description

தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரன்*

*(தோட்டி என்ற வார்த்தையினை வேறு வழியில்லாமல் உபயோகபடுத்துவதற்கு மன்னிக்கவும்)*

தூய்மை பணியாளர்கள் - சமுகத்தில் இழிநிலையானவர்கள் என பார்க்கபடும் அன்பர்கள் , ஆம் இவர்களை நாம் எவ்வாறு காண்கிறோம்? நல்ல நிலையிலா? அல்லது ஒதுக்கபட்டவர்களாகவா? .

தீபாவளி - வெள்ளம் -விழாக்கால குப்பைகளை அகற்றுவதற்கும் - கொரோனா காலங்களில் குமிகின்ற மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்காக அவர்கள் செய்கின்ற பெரும்பணியினை எவ்வாறு கவுரவிக்கபடுத்துகிறோம்? அல்லது பெயருக்கு கைதட்டி ஏளனபடுத்துகிறோமா? அல்லது காலங்காலமாக தாழ்த்தபட்டோர்களை விடவும் கீழானவர்கள் என ஒதுக்குகிறோமா?

ஆர்எஸ்எஸ் ஏற்றுக்கொண்டுள்ள வர்ணாசிரம தத்துவம் தராத மதிப்பை இந்நாளில் *கொரோனா முன்களபணியாளர்கள்* என்ற மதிப்புமிகு பெயரைக்கொண்டு அவர்களை அழைத்தாலும், சக மாந்தராய் நம்மை போன்ற சக மனிதனாய் எப்போது கண்டிருக்கிறோமா?

அவர்களுக்கு நாம் ஒவ்வொரு இடரிலும் அளிக்கும் இந்த மரியாதையெல்லாம் தற்காலிகமானதுதான் , இதனால் அவர்களின் நிலை உயருமா? இல்லை! இல்லை! இல்லவே இல்லை. நாம் வெறும் tissue paperஐ போலத்தான் இவர்களை உபயோகபடுத்துகிறோம் என்று அவர்களும் அறிவார்கள்.

இந்நூலில் கூறப்படும் செய்தியானது

*தோட்டிகள்* என கூறப்பவர்களை, கேரளத்தின் ஒரு பகுதியில் எவ்வாறு வாழ்ந்தனர், எவ்வாறு ஏளனப்படுத்தபட்டனர் - ஏமாற்றப்பட்டனர், அதிகார வர்கத்தினரால் எப்படி நிராகரிக்கபட்டனர் - அவமானபடுத்தபட்டனர் என்பதையும் , *தோட்டியின் குழந்தைகளை* பள்ளிகளின் ஆசிரியர்களும் - சக மாணவர்களும் ஒதுக்கி- அடிமைகளாக நடத்திய செய்தியினை நிகழ்வாக பேசுகின்றது.

இக்கதையானது .......

( ஒரு *தோட்டி* தன் மகனை அவன் விருப்பமின்றி *தோட்டி* ஆக்குகிறான், ஆனால் அவனோ இந்த *தோட்டி* வாழ்க்கையிலிருந்து வெளிவர நினைக்கிறான் . இவ்வாழ்கையில் அகப்பட்ட அவன் தன் மகனாவது தன்னை போல *தோட்டியாக* கூடாது என்றும் தோட்டியென்றால் என்னவென்றே அவனுக்கு தெரியக்கூடாது என்று பெரும்முயற்சி எடுக்கிறான், இதற்காக அவன் அவனை சார்ந்த சிலரையே ஏமாற்றுகிறான், அதிகாரிகளால் ஏமாறுகிறான் .)

You may also like

Recently viewed