பாசிசம் -மிகச் சுருக்கமான அறிமுகம்


Author: கெவின் பாஸ்மோர் தமிழில் அ.மங்கை

Pages: 202

Year: 2012

Price:
Sale priceRs. 130.00

Description

பாசிசத்தை வரையறை செய்வது சிரமமான காரியம். தெருச்சண்டை போடுபவர்களையும், அறிவுஜீவிகளையும் ஒருசேர ஈர்க்கும் கருத்தாக்கத்தை எப்படிப் புரிந்துகொள்வது? வெளிப்படையான ஆணாதிக்கத்தோடு நடக்கும் ஒரு சிந்தனை, பெண்களைக் கவருவது எப்படி? மரபை நோக்கித் திரும்புமாறு அறைகூவல் விடுத்துக் கொண்டே, நவீனத் தொழில்நுட்பத்தின் மீது ஈடுபாடு கொள்ளும் விதத்தை எப்படிப் புரிந்துகொள்வது? சமூகக் கட்டமைப்பின் நிலையான தன்மை என்ற பெயரில் வன்முறையைப் போதிக்கும் கருத்தாக்கத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்? நவீன உலகின் மிக முக்கிய நிகழ்வான பாசிசத்தில் பொதிந்துள்ள எதிர்முரண்களைக் கெவின் பாஸ்மோர் அருமையாக விளக்குகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உருவான சமூக, அரசியல், அறிவுத்துறை நெருக்கடிகளில் தொடங்கிய பாசிச இயக்கங்களும், ஆட்சிகளும் இத்தாலி, ஜெர்மனியில் செயல்பட்ட விதம், கிழக்கு ஐரோப்பா, ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் ‘தோற்றுப்போன’ பாசிச இயக்கங்களின் நிலை ஆகியவற்றைக் கொண்டு இதனை வெளிப்படுத்துகிறார். இனவாத தேசியம் பாசிசத்திற்கு எத்தனை முக்கியம் என்பதையும், ஆண்-பெண் இருபாலரையும் தொழிலாளிகள்-முதலாளிகள் ஆகியோரையும் பாசிசம் ஈர்த்த விதத்தையும், சமீப காலமாக ஐரோப்பாவில் தீவிர வலதுசாரித்துவம் மறுஉயிர்ப்பு பெற்று வருவதையும் விளக்குகிறார்.

You may also like

Recently viewed