Description
கடந்த கால வரலாறு என்பது நிகழ்கால மக்களுக்கு சிறந்த படிப்பினையாகவும் அறிவுரை யாகவும் திகழும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதுவும் இறைத்தூதர்களின் வரலாறு மனித சமூகத்துக்கு மிகுந்த நற்பயன் அளிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
பிறந்த போதே திடுக்கிடும் சூழலைக் கடந்த மூஸா நபி அவர்கள் கொடுங்கோலன் ஃபிர்அவ்ன் இல்லத்தில் வளரும் சூழல், திருமணம், அவர்களுக்கு வழங்கப்பெற்ற தூதுத்துவம், அற்புதங்கள், மீண்டும் எகிப்து திரும்புதல், தூதுத்துவத்தை நாடாளும் மன்னரிடமும் மக்களிடமும் சேர்ப்பித்தல் ஆகியவற்றை வரிசையாக இந்த நூல் முன்வைக்கிறது. கொடுங்கோலன் ஃபிர்அவ்னின் அழிவைப் பற்றியும் இறுதியில் சத்தியம் வென்றதையும் தெளிவுபடுத்துகிறது. அநீதியை எதிர்த்து மூஸா நபி போராடி வென்றதை இந்த நூல் அருமையாக விவரிக்கிறது. மூஸா நபியின் துணிவு, வீரம், வேகம், விவேகம், சமூக நீதிக்கான போராட்டம், ஒடுக்கப்பட்டோருக்கு உதவிக்கரம் நீட்டுவது உள்ளிட்ட சிறப்புப்பண்புகளை இதில் காணலாம்.
மூஸா நபியின் வரலாற்றை தங்களின் முன் சமர்ப்பிப்பதில் மனமகிழ்கின்றோம். இது போன்ற நூல்களை வாசித்துப் பயன்பெறுவது காலத்தின் கட்டாயம். குறிப்பாக இளைய சமுதாயம் சீரான நல்வாழ்வு வாழ இந்த நூல் பெரும்பங்கு வகிக்கும். இந்த வரலாறு விற்பனைக்காகக் கூறப்படும் கற்பனைக் கதையல்ல. மாறாக முழுக்க முழுக்க உண்மை நிகழ்வாகும்.