Description
அருளாளர்கள் 1000 Cash & Delivery Not Available( வி பி பி மூலம் அனுப்ப இயலாது)
பேரருளைப் பெறுவதற்கான சூட்சும இரகசியம்..
இந்நூல் வாயிலாக..
பகுத்தறிவுடன் மெய்யறிவைப் போதித்து, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று அன்புடன் வாழ்ந்து, மரணமிலா பெருவாழ்வுப் பெற்று, ஒளிதேகம் அடைந்த சித்தர்களின் அருளைப் பெறலாம்.
சித்தர்களின் பேரருளால் அவதாரம் எடுத்து வந்து, அட்டமா சித்துக்களால் மக்களுக்கு அருட்சாதனைகள் செய்து, ஜீவ சமாதியான மகான்களின் பூரண அருளைப் பெறலாம்.
ஞானத்தை விதைத்த ஞானியர்களின், யோகங்கள் அருவிய யோகியர்களின், தவமியற்றிய தவசீவர்களின், சத்திய தரும சன்மார்க்க சீலர்களின் அருளைப் பெறலாம்..
அவரவர் நட்சத்திரத்திற்கேற்ப சித்தர்களை, மகான்களை வள இறைப்பேரருளைப் பெற்று, வினைகளை தீர்ந்து வாழ்வில் விடியலைக் காணலாம்.
புண்ணியம் செய்தவர்களே இந்நூலைத் தொடுவதற்கான பாக்கியம் பெற்றவராவர். சாதி, மத பேதமின்றி வாழ்ந்து மக்கள் தொண்டு செய்யும் நல்லோராக இருந்தால், ஞான வாசல் நிச்சயம் திறக்கும்.
இந்நூல் ஒவ்வொரு இல்லத்திலும் இருந்தால் அருளாளர்களின் 'அருட்காப்பு' நிச்சயம் கிடைக்கும்.
உண்மை ஆன்மீகத்தை தேடுவோருக்கு
"அருளாளர் 1000" ஓர் உன்னதப் புதையவே.
வெற்றி நிச்சயம்
என்றும் தமிழுடன்
ஜீவ அமிர்தம் கோ. திருமுருகன்