Description
வெட்டுப்புலி தீப்பெட்டியில் ஒருவர் சிறுத்தைப்புலியை வெட்டுவதற்குக் கையை ஓங்கிக் கொண்டிருக்கிறார். அவர், செங்கல்பட்டு பூண்டி ஏரி பகுதியில் வாழ்ந்த நிஜமனிதர் என்று தெரிந்த அந்த வினாடியில் கதை ஆரம்பிக்கிறது. அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்தபோது, அத் தீப்பெட்டியின் வரலாறு, தமிழ் சினிமாவையும் திராவிட இயக்கங்களையும் துணைக்கு இழுத்துக் கொள்வது இயல்பான விறுவிறுப்பு. இந்த மூன்றுக்குமே இன்றைய தேதியில் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு வயதாகிறது. இந்த எதேச்சையான ஒற்றுமையை நாவலின் மையச் சரடாக்கி வெற்றி கண்டிருக்கிறார் நூலாசிரியர். சரித்திரமும் புனைவும் கூடித் தரித்தக் குழந்தை.