Description
முருகேசபாண்டியன் தனது சொந்த அனுபவங்களின் வழியே சமயநல்லூர் என்ற மதுரையை அடுத்த சிறிய ஊரின் சமூக,கலாச்சாரச் சூழல்களையும் அதை உருவாக்கிய காரணிகளையும் இன்றைய மாற்றத்தையும் அடையாளம் காட்டுகிறார். ஒரு ஊரின் ஐம்பதாண்டு காலச் சாட்சியாகத் தன்னை உணரும் முருகேசபாண்டியன், தனக்கு ஊரோடு உள்ள ஈரமான உறவைச் சித்திரிப்பதில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறார். வெறுமனே ஊர் நினைவுகளைப் பெருமிதமாக அடையாளம் காட்டாமல், அது பண்பாட்டுரீதியில் எவ்வாறு அமைந்திருந்தது, தமிழர் வாழ்க்கை எப்படிக் காலந்தோறும் உருமாறி வருகிறது என்று சுட்டிக்காட்டுவது இந்நூலின் சிறப்பு.-. ராமகிருஷ்ணன்