Description
இந்நூல் இந்தியாவின் வெவ்வேறு மொழிகளிலிருந்து இருபது நாவலாசிரியர்களின் படைப்புகளை முன்வைக்கிறது. அவற்றைப்பற்றிய ரசனைக்கட்டுரை என்று இவற்றை சொல்லலாம். அவை ஏன் மகத்தான நாவல்களாக இருக்கின்றன என்பதையே இக்கட்டுரைகள் ஆராய்கின்றன.
எழுதப்பட்டு பல ஆண்டுகளுக்குப்பிறகு இக்கட்டுரைகள் அண்மையில் கனலி இணையதளத்தில் மறுபிரசுரம் செய்யப்பட்டன. மீண்டும் அடுத்தடுத்த தலைமுறையால் இவை படிக்கப்படுகின்றன என்பதே இக்கட்டுரைகளின் தேவைக்கும் தரத்திற்கும் சுவாரசியத்திற்கும் சான்று என்று நினைக்கிறேன். இவை படைப்பாளி, படைப்பு, அது உருவான களம் ஆகிய மூன்றையும் ஒரே பார்வையில் பார்க்கும் தன்மை கொண்டவை. ஆகவே அந்நூல்களை மிக விரிந்த களத்தில் வைத்து வாசகன் அணுக முடியும்.
-ஜெயமோகன்