Description
19ஆம் நூற்றாண்டில் தென்திருவிதாங்கூர் பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தவரும் ஞானமடைந்தவருமான அய்யர் வைகுண்டர் அருளிய அம்மானை வடிவில் அமைந்த 'அகிலத்திரட்டு அம்மானை' முதல் முறையாக ஆய்வுப் பதிப்பாக வெளிவருகிறது. அய்யாவின் மரபினராகிய பால பிரஜாபதி அடிகளாரின் மேற்பார்வையில் மூலப் பதிப்புகளுடன் ஒப்புநோக்கப்பட்ட ஆதாரபூர்வமான பதிப்பு இது. நீண்ட ஆய்வு முகவுரை, நூல் சுருக்கம், சொற்பொருள் விளக்கம் கொண்டது. கடின உழைப்பில் இந்நூலைப் பதிப்பித்திருக்கிறார் பேராசிரியர் அ.கா.பெருமாள்.