Description
கிருஷ்ணன் நம்பியின் படைப்பாக்கக் காலம் கால்நூற்றாண்டின் நீட்சி கொண்டது. அவரது வாழ்க்கை சுந்தர ராமசாமி சொல்வதுபோல 'பாதியில் முறிந்த பயணம்' எனினும் அந்தப் பயண காலத்துக்குள் இலக்கியத்தின் எல்லா வகைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.சிறுகதைகள், கவிதைகள், குழந்தைப்பாடல்கள், கட்டுரைகள், இலக்கியக்குறிப்புகள், முன்னுரைகள், கடிதங்கள் என்று கிருஷ்ணன் நம்பியின் எல்லா ஆக்கங்களும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மென்மையும் கிண்டலும் நகைச்சுவையும் முதன்மையான இயல்புகளாகக் கொண்ட இந்த ஆக்கங்கள் வாசகனைத் தொடர்ந்து வாசிக்க வலியுறுத்துபவை.சுகுமாரன்.