Description
திரைப்படம் குறித்த தியடோ ர் பாஸ்கரனின் பார்வை விரிவும் நுட்பமும் கொண்டது. சமகால வாழ்வோடு திரைப்படம் கொண்டுள்ள இணைவுகள் அல்லது இடைவெளிகள் குறித்து அவர் சமூகவியல் நோக்கில் சிந்திப்பவர் என்பதால் மட்டும் உருவனாதல்ல அது. மிகமிகப் புதிதான ஒரு கலைவடிவம் எப்படி பேக்பைப்பரைப் போல எல்லோரையும் குழந்தைகளாக்கித் தன் பின்னால் இழுத்துச் செல்ல முடிந்தது என்பதை அவர் ஒரு வரலாற்றாய்வாளருக்குரிய முறையில் விளக்குகிறார். ஒரு நூற்றாண்டுக்கு சற்று அதிகமான கால இடைவெளியில் அந்தக் கலை நம்மீது நிகழ்த்தியுள்ள தாக்கங்களைத் தொகுக்கும் பாஸ்கரனின் கட்டுரைகள் நமக்கு நன்கு பரிச்சயமான ஒரு கலையின் நாம் கவனிக்கத் தவறிய பகுதிகளை அறிமுகப்படுத்துகின்றன. பன்முக அர்த்தங்களை உள்ளடக்கிய அவரது மொழிநடை இக்கட்டுரைகளுக்குப் புனைவின் சாயல்களை அளிப்பதால் அவை நம் வாசிப்பனுவத்தை மேலான தளத்துக்கு உயர்த்துகின்றன.