Description
16ஆம் நூற்றாண்டு. ஒட்டாமன் சாம்ராஜ்யம். மர்மமான சூழலில் கொல்லப்பட்டிருக்கும் இரண்டு நுண்ணோவியர்கள். கொலைக்கான காரணமும் கொலையாளி யார் என்ற தடயமும் அவர்கள் பாதி வரைந்து முடித்திருக்கும் நுண்ணோவியங்களில் பொதிந்திருக்கின்றன.பல நூற்றாண்டு பழமைகொண்ட பாரசீக நுண்ணோவிய மரபு. முற்றிலும் முரண்பாடான கண்ணோட்டத்தோடு ஆதிக்கம் செலுத்த வரும் ஒரு புதிய வேற்று மதத்தினரின் ஓவியப்பணி. மரபிற்கும் மதத்திற்கும் ஓவியன் தனது கலைப்படைப்பில் இடமளிக்க வேண்டுமா? கலைஞனின் ஆன்மீகக் குழப்பங்களையும் அவன் வாழ்க்கையும் கலையும் முரண்படுகிற சிக்கல்களையும் ஒரு துப்பறியும் கதையைப் போன்ற வேகத்தோடு ஆழமாகவும் அகலமாகவும் பகுப்பாய்வு செய்யும் ஒரு மகத்தான நாவல் இது.