Description
சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும் (ஈழம் - காலச்சுவடு பதிவுகள் (1988-2008))சுந்தர ராமசாமியின் காலச்சுவடு தோன்றிய காலகட்டம் முதல் நான்காம் ஈழப்போருக்கு முந்தைய காலகட்டம் வரை காலச்சுவடில் வெளிவந்த அரசியல் பதிவுகளின் தொகுதி இந்நூல். இந்திய அமைதிப்படையின் கோரமுகத்தை உரித்துக்காட்டிய 'சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும்' கட்டுரை காலச்சுவடு இதழ் இரண்டில் வெளிவந்து சூழலில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. உலகத் தமிழ் மாநாட்டில் தமிழ் ஈழ அறிஞர்கள் வெளியேற்றப்பட்டமைக்கான எதிர்வினை, சூரியக்கதில் -2 தாக்குதலின் அனுபவப் பதிவு, ஆழப்போராட்டம் பற்றிய சேரனின் விமர்சனப் பார்வை, ஜூலை 83 கலவரத்தின் இருபத்தைந்தாம் நினைவாண்டு சிறப்பிதழ், தமிழக முகாம்களில் ஈழத் தமிழர் நிலை என சுமார் இருபதாண்டு கால ஈழம் பற்றிய பன்முகப்பட்ட பதிவுகளின் தொகுதி இந்நூல்.ஈழப்பிரச்சினை பற்றிய முழுமையான புரிதலுக்கு அவசியமான வாசிப்பாக அமைகிறது இத்தொகுதி.