Description
பர்ஸா' என்ற சொல்லுக்கு முகத்தைத் திறந்துவைத்தல் என்று பொருள். 'பர்தா'வின் எதிர்ப்பதம்.இந்த நாவலின் மையப் பாத்திரமான ஸபிதா, முகத்தைத் திறந்துவைத்திருக்கிறாள். அதன் மூலம் மனதையும் திறந்துவைத்திருக்கிறாள். திறந்த மனத்துடன் இஸ்லாமிய வாழ்க்கைநெறிகளுக்குள் பயணம் செய்கிறாள். அதன் சடங்குகளைக்கேள்விக்குட் படுத்துகிறாள். பெண் என்பதால் மதம் தன்னை உதாசீனம் செய்கிறதா என்று விசாரணை செய்கிறாள் ஸபிதா.சுகுமாரன்.