Description
உலகக் கலைவெளியில் மாபெரும் சிற்பச் சாதனையாகக் கருதப்படுபவை மாமல்லபுரத்துச் (கடல் மல்லை)சிற்பத் தொகுதிகள். குறிப்பாக, 'அர்ச்சுனன் தபசு' என்ற சிற்பத் தொகுதி.அர்ச்சுனன் தபசு சிற்பத் தொகுதியில் இடம்பெறும் எல்லாக் கலைக் கூறுகளையும் ஆராய்கிறது இந்நூல். தவமியற்றுவது அர்ச்சுனனா, பகீரதனா? அதன் களம் இமயமா, கைலாயமா? தவம் நிகழ்வது எந்தக் காலத்தில்? எந்தப் பொழுதில்? சிற்பத் தொகுதியில் இடம்பெற்றுள்ள உயிரினங்கள், தாவரங்கள் எவையெவை? ஒரு கற்கனவின் எல்லா அம்சங்களையும் புனைகதைக்குரிய சுவையுடன் ஆய்ந்து விளக்குகிறார் சா. பாலுசாமி.