Description
இந்திய, தமிழகப் பண்பாட்டு அரசியலில் விவாதிக்கப்பட்டுவரும் இராமர் பாலம், சரஸ்வதி ஆறு, துவாரகை, குமரிக்கண்டம் போன்ற கருதுகோள்களை, மதச்சார்பும் இனவாதமும் மொழிப்பற்றும் ஏற்படுத்தியுள்ள மூடுதிரைகளை விலக்கி ஒரு நிலவியலாளரின் கண்ணோட்டத்தில் துறைசார்ந்த ஆதாரங்களுடன் வரலாற்றுப் பின்னணியில் ஆராயும் இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள், ஆக்கப்பூர்வமான ஆய்வுகளை முன்னிலைப்படுத்தி போலி ஆய்வுகளை இனங்காட்டுகின்றன.