Description
பாக் நீரிணைப் பகுதியில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் போதெல்லாம் கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்ற குரல் தமிழகத்தில் உரத்துக் கேட்கிறது. குடிக்கத் தண்ணீர்கூடக் கிடைக்காத, கட்டாந்தரையான ஒரு சிறிய தீவு ஏன் தமிழகத்தில் ஒரு உணர்ச்சிகரமான பிரச்சினையாக இருக்கிறது? இந்தச் சர்ச்சையின் பின்னணி என்ன? இந்திய - இலங்கை உறவுகளில் சிக்கல் ஏற்படாமல் இந்தியாவின் நலன்களை, குறிப்பாகத் தமிழக மீனவர்களின் நலன்களை உறுதிசெய்யவும் பாதுகாக்கவும் முடியுமா?இந்தக் கேள்விகளுக்கு விடைகாண முயல்கிறது இந்தப் புத்தகம். கச்சத்தீவு குறித்து தமிழில் வெளிவரும் விரிவான முதல் நூல் இது.