Description
தமிழக வரலாற்றில் சமயப் போர்களுக்குப் பஞ்சமில்லை. வெள்ளையர் ஆட்சியின் விளைவாக ஏற்பட்ட சமூக மாற்றங்களின் பின்னணியில் கிளர்ந்த சமயப் போராட்டங்கள் அளவிலும் பண்பிலும் புதிய வடிவங்கள் எடுத்தன. பத்திரிகைகள், நூல்கள், துண்டுப்பிரசுரங்கள் முதலான அச்சு சாதன வெளிப்பாடுகளால் சமயப் போராட்டங்கள் கூர்மைபெற்றன.நவீன தமிழக வரலாற்றில் வெடித்த முக்கிய சமயப் போராட்டம் என அருட்பா மருட்பா கண்டனங்களைக் கூறலாம். சமரச சுத்த சன்மார்க்கியாகிய வள்ளலாரின் நெஞ்சுருக்கும் அனுபவப் பாடல்கள் 'திருவருட்பா' என்னும் பெயரில் 1867இல் அச்சாகி வெளிவந்தபொழுது ஆறுமுக நாவலர் தலைமையிலான பழமைப் பிடிப்புள்ள சைவர்கள் இதனைக் கண்டித்தனர். தேவாரம், திருவாசகம் முதலிய சைவத் திருமுறைகளே அருட்பா என்றும், வள்ளலார் பாடல்கள் குற்றமுடைய மருட்பா என்றும் வாதிட்டனர். இரு தரப்பினரும் தம் பக்கத்தை நிறுவும்பொருட்டு ஏராளமான கண்டன நூல்களைச் சிறிதும் பெரிதுமாக வெளியிட்டனர். வள்ளலார் - ஆறுமுக நாவலர் காலத்தில் மட்டுமல்லாமல் (1867-1876) இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் (1903-1907) கண்டனங்கள் தொடர்ந்தன.தமிழ்ச் சமூகத்தின் தலைசிறந்த அறிவாளர்கள் எழுதிய இக்கண்டன நூல்களில் விதண்டாவாதமும் மயிர்பிளத்தலும் மட்டுமல்ல ஆழ்ந்த புலமையும் திறமான வாதமுறையும் மேனாட்டு அறிவு முறைகளின் செல்வாக்கால் புதுக்கோலம் பூண்ட தமிழர் புலப்பாட்டு நெறியும் வெளி