Description
சுந்தர ராமசாமியின் முதலிரு நாவல்களிலிருந்து மொழி நடையிலும் அமைப்பிலும் வேறுபட்ட வகையில், முழுக்கவும் குடும்பம் சார்ந்த சூழ்நிலைக் களமாகக் கொண்டது ''குழந்தைகள் பெண்கள் ஆண்கள்.'' கேரளத்தின் கோட்டயத்தில் 1937, 38, 39ஆம் ஆண்டுகளில், ஐந்து குடும்பங்களைச் சார்ந்த மனிதர்களிடையேயான உறவு நிலைகளை மையமாகக் கொண்டு இந்த நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. அரசியல், சமூகம் சார்ந்த புறவுலகின் நிகழ்வுகள் குடும்ப உறவுகளுக்குள் ஏற்படுத்தும் மறைமுகத் தாக்கங்களையும் வெளியுலகுக்குத் தெரியாமல் அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் ஏக்கங்கள், விம்மல்கள், குமுறல்களையும் கலைநயத்துடன் உணர்த்தும் நாவல் இது. தனது நாவல்களில் மிக முக்கியமானது என்று இதனைக் குறிப்பிடுகிறார் சுந்தர ராமசாமி.