Description
'தோட்டியின் மகனை''ப் படித்த போது விருப்பமும் வியப்பும் மனதில் அலைமோதின. வெளியுலகத்துக்கே தெரியாத ஒரு இருண்ட வாழ்க்கையினூடே எப்படி இவரால் இவ்வளவு சகஜமாகப் பகுத்து மன உணர்ச்சிகளை அள்ளிக் கொண்டு வர முடிகிறது? தகழி வெளிப்படுத்தியிருப்பது தோட்டிகளின் வாழூக்கை சார்ந்த தகவல்களை அல்ல என்பதையும் காலம் அவர்களது அடி மனங்களில் மூட்டும் நெருப்பு என்பதையும் உணர்ந்தபோது மிகுந்த வியப்பு ஏற்பட்டது. கொடுமையில் மனம் கொள்ளும் கோபத்தில், ரத்தத்தில், உஷ்ணம் ஏறாமல் என்னால் அபபோதெல்லாம் ''தோட்டியின் மக''னின் எந்தப் பக்கத்தையும் படிக்க முடிந்ததில்லை.முன்னுரையில் சுந்தர ராமசாமி.