Description
சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப் பாகக்கொண்டு வரும் திட்டத்தில் வெளிவரும் இரண்டாவது தொகுப்பு இது. இதில் ''பிரசாதம்'' ''சன்னல்'' ''லவ்வு'' ''ஸ்டாம்பு'' ''ஆல்பம்'' ''ஒன்றும் புரியவில்லை'' ''வாழ்வும் வசந்தமும்'' ''கிடாரி'' ''சீதைமார்க் சீயக் காயத்தூள்'' ''மெய்+பொய்=மெய்'' ஆகிய ஒன்பது கதைகள் உள்ளன. சுந்தர ராமசாமியின் சிறுகதைகளிலே உருவ அமைதியுடன் கருத்தமைதியும் கலந்து வந்துவிடுகிறது என்பது அவருடைய தனிச் சிறப்பாகும். ஜானகிராமனின் கிண்டல், கசப்புடன், சுந்தர ராமசாமி தனது என ஒரு ஆழத்தையும் கனத்தையும் சேர்த்துக் கொண்டுவிடுகிறார்'''' என்கிறார் இத்தொகுப்பு குறித்த மதிப்புரையில் க.நா. சுப்ரமண்யம்.