Description
சுந்தர ராமசாமி, தனது நாட்குறிப்பேட்டில் தன் கைப்பட எழுதிவைத்திருந்த, முழுமைபெற்ற, பெறாத சிறுகதைகள் மற்றும் நெடுங்கதைகளின் கரட்டு வடிவங்களின் தொகுப்பு இந்நூல்.50 ஆண்டுகளுக்கு மேல் எழுதிவந்த சுந்தர ராமசாமியின் பன்முக எழுத்துப் பயணத்தின் முக்கியமான பண்புகள் அனைத்தும் அவரது இறுதி ஆண்டுகளில் எழுதப்பட்ட இந்தக் கதைகளிலும் வலுவாக வெளிப்படுகின்றன.இந்தக் கதைகளையும் இவை எழுதப்பட்ட காலகட்டத்தில் பிரசுரமான கதைகளையும் பார்க்கும்போது அவர் தனது கடைசி ஐந்து ஆண்டுகளில் மிகவும் தீவிரமாகப் படைப்பாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பது புலனாகிறது. முதுமையையும் நோய்களையும் அவதூறப் பிரச்சாரங்களையும் எதிர்த்து ஒரு படைப்பாளி மேற்கொண்ட போராட்டத்தின் இறுதித் தடயமே இந்தத் தொகுப்பு.