அண்ணல் அடிச்சுவட்டில்


Author:

Pages:

Year: NA

Price:
Sale priceRs. 250.00

Description

1937, அக்டோபர் 2 நியூயார்க்கிலிருந்து டப்ளின் செல்லும் கப்பலில் ஒரு தமிழ் இளைஞர் ஒரு கனவு கண்டார் - மகாத்மா காந்தியின் வாழ்க்கையை ''டாகுமெண்டரி'' படம் எடுக்க வேண்டுமென்று. இரண்டரை ஆண்டுகள். இருமுறை உலகைச் சுற்றினார். ஒரு லட்சம் மைல் பயணம். முப்பது ஆண்டுகளில் நூறு காமிராக்காரர்கள் படம்பிடித்த50,000 அடி நீளப் படங்களைக் கண்டெடுத்தார்.1940இல் படம் வெளிவந்தது. இந்த இளைஞன் ஏ.கே. செட்டியார். தமிழில் பயண இலக்கியத்தின் முன்னோடி, ''குமரிமலர்'' ஆசிரியர். தமிழ்ச் சமூக வரலாற்றை ஆவணப்படுத்தியவர். காந்தி பட உருவாக்கத்தைப் பற்றி ஏ.கே. செட்டியார் எளிய நடையில், சுவையாகவும் சிறுசிறு நிகழ்ச்சிக் குறிப்புகளுமாக எழுதிய கட்டுரைகள் முதன் முதலாக நூலுருவம் பெறுகின்றன.

You may also like

Recently viewed