Description
தனது அனுபவத்தின் பெரும் பகுதியைத் தேசிய இனப்பிரச்சினை நெருக்கடியின் விளைவாய் பெற்றிருக்கின்ற சேரனின் குரலை அவரது கவிதைகளின் ஊடாக நாம் படித்தும் கேட்டும் வந்திருக்கிறோம். நமது வாழ்வைப் பற்றிய அவரது ஏழு கவிதைத் தொகுதிகளை நாம் இதுவரை படித்துமிருக்கிறோம். ஆனாலும் இப்போது தொகுத்து வெளியிடப் படுகின்ற அவரது நேர்காணல்களின் ஊடாக மனிதர்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் துன்பங்களுடன், வாழ்கின்ற காலத்தின் சூழலை முன்னிறுத்திய கவிஞன் என்கிற அவரது பரிமாணத்தையும் தாண்டி ஆளுமையையும் அதிர்வையும் இந்த நேர்காணல்களைப் படிக்கின்றபோது உணர முடிகிறது.