Description
புனிதப்படுத்தப்பட்ட நம்பிக்கை கேள்விக்கும், விவாதத்துக்கும், விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டதாகிறது. அதனைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் தனது பகுதியாக அதை ஆக்கிக் கொள்கிறான். சாதி - அப்படியான நம்பிக்கைகளுள் ஒன்று. நியாயமோ, தர்க்கமோ, ஆதாரங்களோ அற்ற அந்தப் புனித நம்பிக்கையை அதனால் நசுக்கப்படும் ஒருத்தர் அடித்து நொறுக்கியாக வேண்டும். மறுக்க முடியாத ஆதாரங்களை, புறக்கணிக்க முடியாத தர்க்கத்தோடு முன்வைப்பதன் மூலமே தனது நியாயத்தை அவர் உணர்த்த முடியும். அத்தகைய காரியத்தைத் தான் இக்கட்டுரைகள் செய்கின்றன. கல்வி, பொருளாதாரம், சட்டம், வெகுசனப் பண்பாடு எனப் பல்வேறு தளங்களையும் ஆராய்கிற இக்கட்டுரைகள், ஈழப் போராட்டத்தின் போக்கு. பெரியாரின் பங்களிப்பு முதலானவற்றைப் பற்றியும் கூர்மையான அவதானங்களைப் புதிய கோணங்களிலிருந்து முன்வைக்கின்றன.