Description
சினிமா காட்சிகளை எடிட்டர் கத்தரித்து நீக்கும் சேர்க்கும் பாணியை நாவலுக்குரிய பாணியாய் உருமாற்றி, வார்த்தைகளைப் பேசும் காட்சிகளாக முருகன் அமைத்துள்ளது இந்நாவலின் சிறப்புகளில் ஒன்றாகும். வாழ்க்கையின் கனத்தையும் கலைஞனின் படைப்பாற்றலையும் இணைக்கும் புள்ளியாக நாவலின் வடிவம் அமைந்துள்ளது. முருகன் பேணும் எழுத்துக்கட்டுப்பாடும் சொற்களை விரயப்படுத்த விரும்பாத அவரது கலைத்தன்மையும் ''நிழல் முற்ற''த்தைக் கச்சிதமான கதை உலகமாக ஆக்குவதில் கைகொடுக்கின்றன.