தூர்வை


Author:

Pages:

Year: NA

Price:
Sale priceRs. 230.00

Description

இரண்டு தலைமுறைகளுக்கு முன் உருளக்குடி கிராமத்தில் விவசாய நிலங்களுடன் வீடு - வாசல் என்று வசதியாக வாழ்ந்த தலித் சமூகத்தினரின் வாழ்க்கை, அப்பகுதியில் தீப்பெட்டித் தொழிற்சாலைகள், சாக்குக் கம்பெனிகளின் வருகையினால் பெரும் மாற்றத்துக்குள்ளாவதைச் சித்தரிக்கும் நாவல் இது. ''''தூர்வை, அதிகம் அலட்டிக் கொள்ளாமல் எழும் ஒரு மாற்றுக்குரல், எதிர்ப்புக்குரல், தான் ஒரு எதிர்ப்புக் குரல் என்று இது இரைச்சல் இடுவதில்லை. ஏனெனில் அதுவல்ல அதன் நோக்கம். தானறிந்த வாழ்க்கையின் ஒரு சித்திரம் இது. வரலாற்றின் ஒரு பரிமாணம். வெகு தீர்மானமான அமைதியான குரல். இக்குரல்தான் ஒரு எழுத்தாளனின் கலை சமூக சக்தியாக, உண்மைக்குச் சாட்சியாக, மனசாட்சியின் குரலாக, இப்படி பல பரிமாணங்களில் தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறது'''' என்கிறார் வெங்கட் சாமிநாதன்.

You may also like

Recently viewed