Description
காலச்சுவடு இதழில் 1995முதல் 1997வரை வெளிவந்த எட்டு நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல்.எஸ்.என். நாகராஜன், கே. சச்சிதானந்தன், டி.ஆர். நாகராஜ், சி. சிவசேகரம், அம்பை, குலசிங்கம், முத்தம்மா, ஓவியா ஆகியோரின் நேர்காணல்கள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. வெளிவந்த காலங்களில் பெரும் கவனிப்பிற்கும் கடும்விவாதங்களுக்கும் உள்ளான பதிவுகள் இவை. பலதரப்பட்ட ஆளுமைகளின் பன்முகங்களை விரிவாகப் பதிவு செய்யும் தொகுப்பு இது.