Description
ஏழாவது வகுப்புவரை படித்துவிட்டு வீட்டுவேலை செய்து பிழைக்கிற பேபி ஹால்தாரின் வாழ்க்கை அனுபவங்களே இந்நூல், பிரேம்சந்தின் பேரனும் ஆந்த்ரா பாலஜி பேராசிரியருமான பிரமோத் குமாரின் தூண்டுதல் காரணமாக எழுதியது ''விடியலை நோக்கி''. எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி உண்மை ஒளிரும் சொந்த வாழ்க்கையைச் சித்திரப்படுத்தும் சக்தி வாய்ந்த ஒரு சுயசரிதை இது. வங்காளியில் எழுதப்பட்டு, ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்ட இச்சுயசரிதை இப்போது தமிழில்.