Description
புத்தாயிரம் ஆண்டின் தமிழ்ச் சிறுகதை, மரபிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. முந்தைய தலைமுறை எழுத்துக்களைப் போல அது வாழ்வின் மீது தீர்ப்பளிப்பதில்லை. முன்முடிவுகளும் அதற்கு இல்லை. வாழ்வை எதிர்கொள்வதில் அதற்கு ஒரு திட்டம் இருப்பதாகவும் தெரியவில்லை. முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் முற்றாக நிராகரித்துவிட்டிருக்கிறார்கள். நவீன வாழ்வு மொழியின் மீது திணித்துள்ள பதற்றங்கிளலிருந்து தமிழ்ச் சிறுகதையை விடுவிப்பதற்கு முற்படும் ஒரு புதிய தலைமுறை தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் உருவாகியுள்ளது. முன்னெப்போதைக் காட்டிலும் சிக்கலானதாக, அடர்த்தியானதாகத் தோற்றமளிக்கும் நவீன வாழ்வின் பன்முகக் கூறுகளை அவற்றின் முழுமையான பரிமாணங்களில் வெளிப்படுத்துவதற்கான ஒரு மொ