Description
நவீனத் தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவரான சுந்தர ராமசாமி பெரும் கனவுகளோடு தொடங்கி நடத்திய காலச்சுவடு எட்டு இதழ்களின் (ஜனவரி 1988 - டிசம்பர் 1989) தொகுப்பு இது.8 சிறுகதைகள், 30க்கும் மேற்பட்ட கவிஞர்களின் 90க்கும் மேற்பட்ட கவிதைகள். ந.முத்துசாமியின் ''நற்றுணையப்பன்'' நாடகம், பல்துறை சார்ந்த 30க்கும் அதிகமான கட்டுரைகள், 15நூல் மதிப்புரைகள், ஆசிரியர் குறிப்புகள், எம்.என்.ராய், க.நா., எம்.கோவிந்தன், டி.எஸ். எலியட், உருதுக் கவிதைகள் பற்றிய சிறப்புப் பகுதிகள், சிறு குறிப்புகள், கடிதங்கள் மற்றும் மொழிபெயர்ப்புகள் (சல்மான் ருஷ்டியின் கடிதம் 2 கதைகள், 10 கட்டுரைகள், 23 கவிதைகள்) என அனைத்தும் அடங்கிய முழுமையான தொகுப்பு. காலச்சுவடு 100 இதழ்களை எட்டியிருக்கும் தருணத்தைக் கொண்டாடும் முகுமாக இத்தொகுப்பு வெளிவருகிறது.