Description
''உரைநடையின் தன்மைகளைத் தக்க வைத்துக்கொண்டு'' நவீன கவிதையைக் கட்டியெழுப்பிய முன்னோடிக் கவிஞர் சுந்தர ராமசாமி. அவரது சிறுகதைகள், நாவல்கள் போலவே கவிதைகளும் படிக்குந்தோறும் புதிய அனுபவங்களைக் கிளர்த்துபவை. விளக்கத்துக்கு அப்பாற்பட்ட வியப்புணர்வைத் தன்னுள் கொண்டிருக்கும் சுந்தர ராமசாமியின் கவிதைக் கலை புதுமையும் சூட்சுமமும் செறிவும் கூடியது. அதனை உள்வாங்கிக் கொண்ட ஒரு வாசிப்பனுபவத்தின் எளிமையான வெளிப்பாடே இந்த நூல்.