Description
பிள்ளைப் பிராயத்துக் காதலுக்குத் தான் எத்தனை மகத்தான சக்தி. வாழ்க்கை பூராவும் நினைவில் மலர்ந்து கொண்டே இருக்கும். அதிலும் நிறைவேறாத காதல் ஓர் இலக்கியமாகவே அமைந்துவிடுகிறது. தேவதாஸ் - பார்வதி காதலும் அத்தகையதுதான்.பள்ளிப் பருவத்திலேயே இருவரும் உயிருக்குயிராகப் பழகுகின்றனர். ஆனால் பார்வதி ஒரு கிழவருக்கு வாழ்க்கைப்படுகிறாள். தேவதாஸின் வாழ்க்கை இருளடைகிறது. காதலையும் காதலியையும் மறப்பதற்காகக் குடிக்கிறான். பார்வதியின் வாழ்க்கையும் நரகம்தான். காதல் முடிவு இலக்கியமாகிறது.பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட ''தேவதாஸ்'' திரைப்படமாகவும் பல மொழிகளில் வந்திருக்கிறது. தமிழில் இப்போது புவனா நடராஜனின் புதிய மொழிபெயர்ப்பில்.