Description
1992இல் வெளிவந்த ஹனீபாவின் ''மக்கத்துச் சால்வை'' கதைகளுடன் மேலும் பத்துக்கதைகளும் சேர்ந்து இத்தொகுதி வெளிவருகிறது. ஹனீபாவின் பெயரைக் கொண்டு அவரை ஒரு இனக்குழுமத்தின் தமிழ் எழுத்தாளராகவோ, அன்றேல் தமிழ் பேசும் நாடொன்றின் இலக்கிய கர்த்தாவாகவோ வரையறுத்துவிடாது அவரை ஒட்டு மொத்தத் தமிழ்ச் சிறுகதைத் துறையின், புதுமைப் பித்தனுக்குப் பின்னர் வரும் பங்களிப்பாளர்களுளொருவராகக் கொள்ளல் வேண்டும். ஹனீபாவின் சிறுகதைகள் கைதேர்ந்த சிற்பியின் பிரதிமைகளாக, ஓவியனின் சித்தரிப்புக்களாக நவீன தமிழலக்கியத்துக்கு நிச்சயமாக வளம் சேர்க்கின்றன.முன்னுரையில் கா.சிவத்தம்பி.