Description
''ஒரு நல்ல கவிதை என்பது புரிவதற்கு முன்பே அதிகமும் உணர்த்திவிடும்'' என்னும் எலியட்டின் கூற்றை நினைவுபடுத்திக் கொள்வோமானால் தமிழில் நாம் முற்றிலுமாகப் புரிந்துகொண்டுவிட்ட கவிதைகள் பலவற்றைக் காட்டிலும் பிரம்மராஜனின் கவிதைகளில் நாம் உணர்ந்துகொள்ள முடிவது அதிகம். ஒவ்வொரு வாசிப்பிற்குப் பிறகும் இவரது கவிதைகள் சிலவற்றில் நாம் பொருள் கொள்ளவியலாத வரிகள் எஞ்சியிருக்கலாம். ஒரு வகையில் பூரணமடையாத இந்த வாசிப்பு அனுபவம்தான் இவரது கவிதைகளை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிற சவாலை நமக்குள் ஏற்படுத்துகிறது போலும்.