Description
திரைப்படத்தை வெறும் பொழுதுபோக்கு ஊடகமாகக் கருதி விலக்கிவைப்பது இன்று பொருத்தமற்ற செயல். அதுவும் தமிழ்ச்சமூகத்தில் அப்படிச் செய்வது பிழை. நவீனத் தமிழ்ச் சமூகத்தின் மதிப்பீடுகளையும் பொதுப் புத்தியையும் பெருமளவுக்குத் திரைப்படமே கட்டமைக்கிறது. வெகுசன மனப்பாங்கைக் கட்டமைக்கிற ஊடகம் என்ற நிலையில் சினிமா பண்பாட்டு ஆய்வுக்கு உரியது. திரைத்துறை, காட்சி ஊடகங்கள் சார்ந்த செழியனின் கட்டுரைகள் இந்தத் தேவையின் காரணமாக எழுதப்பட்டவை. பார்வையாளனின் கோணத்திலிருந்து இந்த ஊடகங்களை அணுகுகிறார் என்பது செழியனின் தனித்துவம். ஏற்கனவே நிலவும் கருத்தாக்கங்களின் அடிப்படையில்லாமல் தனது அனுபவத்தை முன்னிருத்தியே இவற்றைப் பற்றிய மதிப்பீடுகளை அடைகிறார். இது பண்பாட்டு ஆய்வில், பார்வையாளனின் அழகியல் என்ற புதிய அணுகுமுறை உருவாக உதவும்.