Description
சாகச விழைவுக்குச் சமமாக அறஉணர்வும் கொண்ட வேட்டைக்காரர் ஜிம் கார்பெட். விலங்குகளைத் தாழ்வாகக் கருதும் சராசரி மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டவர். மனிதர்களுக்குத் தீங்கு செய்யாத விலங்குகளை வேட்டை இன்பம் கருதிக் கொல்லத் துணியாதவர். முழுநேர எழுத்தாளருக்குரிய அவதானிப்பும் எழுத்தில் முதிர்ச்சியும் கொண்டவர். வனங்களையும் மனங்களையும் மிக நேர்த்தியாகச் சித்தரிப்பவர். அவரது படைப்புகளை வேட்டை இலக்கியம் என்று வகைப்படுத்தலாம்.