Description
நவீன தமிழ்ச் சிறுகதைப் பரப்பின் எல்லைகளை விரிவுபடுத்திய சில படைப்பாளிகளில் ஒருவர், சுரேஷ் குமார இந்திரஜித். முன்னோடிகளில் பாதிப்பு இல்லாமல் சுயமான தடத்தில் செல்கிறவர். இவருடைய கதைகளில் நிகழ்வுகளுக்கும் உள் மனவோட்டத்துக்கு மிடையேயான தருணங்கள் சிருஷ்டிகரமான புனைவுகளாக உருவாகின்றன. வாழ்க்கையின், உறவுகளின் மர்மங்கள் மாயப் புனைவுகளாக வெளிப்படுகின்றன.2005 வரை சுரேஷ்குமார இந்திரஜித் எழுதிய கதைகளின் தொகுப்பு இது.